
பிப்ரவரி 24, பெங்களூர் (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League 2025) போட்டியில், இன்று ஒன்பதாவது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உபி வாரியர்ஸ் (RCB Vs UP Warriorz Women's Premier League 2025) அணிகள் இடையே நடைபெறுகிறது. இரவு 07:30 மணியளவில், பெங்களூர் எம். சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற உபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் தீப்தி வர்மா, முதலில் பந்துவீசு முடிவெடுத்தார். இதனால் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. RCB Vs UPW Toss Update: ஆர்சிபி Vs உபி வாரியர்ஸ்.. டாஸ் தோற்று பெங்களூர் பேட்டிங்.. தொடக்கத்திலேயே சுவாரஷ்யம் எடுக்கும் ஆட்டம்.!
உபி வாரியர்ஸ் அணிக்கு 181 ரன்கள் இலக்கு:
பெங்களூர் அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்களில் ஸ்மிருதி மந்தனா 9 பந்துகளில் 6 ரன்கள், டேனி வாட் 41 பந்துகளில் 57 ரன்கள், எலிசி பெர்ரி 50 பந்துகளில் 84 ரன்கள் அதிகபட்சமாக அடித்திருந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்த பெங்களூர் அணி 180 ரன்கள் எடுத்தது. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உபி வாரியர்ஸ் அணி களமிறங்கவுள்ளது.
டேனி வாட் (Danni Wyatt Hodge) அசத்தல் பேட்டிங்:
SMACKED 🚀
Danni Wyatt-Hodge departs for 57(41) after bringing up her maiden half-century in some style 😮
RCB 121/2 with five overs to go!
Updates ▶️ https://t.co/6637diSP2I#TATAWPL | #RCBvUPW pic.twitter.com/ERgtZrp4fP
— Women's Premier League (WPL) (@wplt20) February 24, 2025
ஸ்மிருதி மந்தனாவின் விக்கெட் எடுத்த தீப்தி ஷர்மா:
Castled! 😮
Deepti Sharma wins the captain battle against Smriti Mandhana! 👏
Updates ▶️ https://t.co/6637diSP2I#TATAWPL | #RCBvUPW pic.twitter.com/sIGPKhsVnx
— Women's Premier League (WPL) (@wplt20) February 24, 2025