RCB Vs UPW | WPL 2025 (Photo Credit: Team LatestLY)

பிப்ரவரி 24, பெங்களூர் (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League 2025) போட்டியில், இன்று ஒன்பதாவது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உபி வாரியர்ஸ் (RCB Vs UP Warriorz Women's Premier League 2025) அணிகள் இடையே நடைபெறுகிறது. இந்த ஆட்டம் இரவு 07:30 மணியளவில், பெங்களூர் எம். சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில், டாஸ் வென்ற உபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் தீப்தி வர்மா, முதலில் பந்துவீசுவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. கடந்த போட்டியில் மும்பை அணியுடன் நடந்த போட்டியில், பெங்களூர் அணி தோல்வியை தழுவி இருந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. RCB Vs UPW: பெண்கள் பிரீமியர் லீக்: இன்று பெங்களூர் - உபி வாரியர்ஸ் சின்னசாமி மைதானத்தில் மோதல்.. விபரம் உள்ளே.! 

அணி வீரர்கள் விபரம்:

உபி வாரியர்ஸ் (UP Warriorz Playing Squad) அணியின் சார்பில் கிரண் நவ்கைர், பிருந்தா தினேஷ், தீப்தி சர்மா, தஹ்லியா மெக்ராத், ஸ்வேதா செஹ்ராவத், கிரேஸ் ஹாரிஸ், உமா செட்ரி , சேனல் ஹென்றி, சோஃபி எக்லெஸ்டோன், சைமா தாகோர், கிராண்டி கவுட் ஆகியோர் களமிறங்குகின்றனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சார்பில் ஸ்மிருதி மந்திரா, டேனி வியாட்-ஹாட்ஜ், எலிஸ் பெர்ரி, ராக்வி பிஸ்ட், ரிச்சா கோஷ், கனிகா அஹுஜா, ஜார்ஜியா வாரம், ஸ்னே ராணா, கிம் கார்த், எக்தா பிஷ், ரெனுகா சிங் தகூர் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

பௌலிங் தேர்வு செய்ததை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தும் உபி வாரியர்ஸ்:

பெங்களூர் - உபி வாரியர்ஸ் டாஸ் அப்டேட்:

ஆர்சிபி அணிக்கு எதிராக களமிறங்கவுள்ள உபி வாரியஸ் அணி விபரம்:

உபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கவுள்ள பெங்களூர் அணி விபரம்: