Renuka Singh Takes Shafali Verma Wicket (Photo Credit: @WPLT20 X)

பிப்ரவரி 17, வதோதரா (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் (TATA Women's Premier League 2025) போட்டியில், நான்காவது ஆட்டம் 17 பிப்ரவரி 2025 இன்று, இரவு 07:30 மணிக்கு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேபிட்டல்ஸ் (RCB Vs DC WPL 2025) அணிகள் இடையே நடைபெறுகிறது. போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி (Jio HotStar) செயலி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். தமிழ் மொழியிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 (Star Sports 1) தொலைக்காட்சியில், நேரலையை தமிழில் காணலாம். இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி, பவுலிங் தேர்வு செய்தது. இதனால் டெல்லி அணி களமிறங்கியது. ஓப்பனிங்கில் கேப்டன் மேக் & ஷபலி களமிறங்கினர். மேக் முதல் பந்தில் ஒரு ரன்கள் சேகரித்தார். DC Vs RCB Women's WPL 2025: டாஸ் வென்று பெங்களுர் அணி பந்துவீச்சு தேர்வு; களைகட்டும் பெண்கள் பிரீமியர் லீக்.!

ரேணுகா சிங் அசத்தல் பந்துவீச்சு:

பின் முதல் ஓவரில் இரண்டாவது பந்தில் ரேணுகா சிங் வீசிய பந்தில் ஷபலி வர்மா விக்கெட்டை இழந்து வெளியேறினார். முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அனுப்பிய ரேணுகா சிங் கடந்த 2 சீசனில் 44 ஓவரில் மொத்தமாக 3 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி இருந்தார். ஆனால், 3 வது பெண்கள் பிரீமியர் லீக் சீசனில் தான் வீசிய 5 ஓவரில் 5 விக்கெட்டை கைப்பற்றி அசதி இருக்கிறார். இதனால் அவர் நல்ல பார்மில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 29 வயதாகும் ரேணுகா சிங் டி20 போட்டியில் 5 விக்கெட் எடுத்த ஒரே இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். கடந்த 2024ம் ஆண்டில் மொத்தம் 36 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.

ரேணுகா விக்கெட் எடுத்த வீடியோ:

பெண்கள் பிரீமியர் லீக் 3 வது சீசனில் 3 ஓவரில் 5 விக்கெட் எடுத்து அசத்திய ரேணுகா சிங் தாகூர் (RENUKA SINGH THAKUR):

சபலி வர்மா விக்கெட்டை வீழ்த்திய ரேணுகா சிங் (Renuka Singh):