
மார்ச் 03, லக்னோ (Cricket News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League WPL 2025) போட்டியில், தற்போது வரையில் 14 ஆட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன. நடைபெற்ற 14 ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 5 போட்டியில் வெற்றிகண்ட புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலும், 3ல் வெற்றிபெற்று மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. தொடக்கத்தில் முதல் இடத்தை தக்க வைத்திருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கிரிக்கெட் அணி, தனது சொந்த மண்ணில் நடைபெற்ற 4 போட்டியில் அடுத்தடுத்து தோல்வியை தழுவி நான்காவது இடத்தினை புள்ளிப்பட்டியலில் தக்கவைத்துள்ளது.
இன்று உபி - குஜராத் அணிகள் மோதல்:
இன்று பெண்கள் பிரீமியர் லீக் போட்டித்தொடரின் 15 வது ஆட்டம், லக்னோவில் உள்ள வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் உபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் (UP Warriorz Vs Gujarat Giants) அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் மூன்று மற்றும் ஐந்தாவது இடத்தில் இருக்கும் அணிகள் மோதுகிறது. உபி அணிக்கு, சொந்த மண்ணில் நடக்கும் ஆட்டம் என்பதால், அந்த அணி வெற்றியுடன் தொடங்க தேவையான முயற்சிகளை முன்னெடுக்கும். இதனால் இன்றைய போட்டி விறுவிறுப்புடன் இருக்கும். அதேநேரத்தில், குஜராத் புள்ளிப்பட்டியலின் இறுதியில் இருந்து முன்னேற போராடும். IND Vs NZ Highlights: இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் ட்ராபி 2025: வருண், குல்தீப், ஷ்ரேயாஸ் அசத்தல் ஆட்டம்.! இந்தியா திரில் வெற்றி.!
நேரலை பார்ப்பது எப்படி?
இன்று நடைபெறும் உபி வாரியர்ஸ் - குஜராத் (Women UPW Vs Gujarat Cricket) ஆட்டம், இரவு 07:30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டியை (Where to Watch WPL 2025 Live Today Match) ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையை பார்க்கலாம்.
குஜராத் கிரிக்கெட் (Gujarat Giants Women's WPL Squad 2025) அணியில் புமாலி, ஹேமலதா, வோல்வார்ட், லிட்சிபீல்ட், சைக், கார்ட்னெர், சிப்சன், டோடின், டியோல், சத்கரே, மூனி, கைஸ்யப், மேகா சிங், பிரக்சிதா நாயக், பிரியா மிஸ்ரா, சப்னம், தனுஜா கன்வர், காசவ் கௌதம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியை கேப்டனாக (Gujarat Giants Women's Team Captain) ஆஷ் கார்ட்னெர் (Ashleigh Gardner) வழிநடத்துகிறார்.
உபி வாரியர்ஸ் (UP Warriorz Women's WPL Squad 2025) அணியில் ஆருஷி ஜோயல், கிரண் நவ்கிரெ, ஸ்வேதா செஹ்ராவாத், விர்ந்தா தினேஷ், சமாரி அதப்பத்து, சினலே ஹென்றி, கிரேஸ் ஹாரிஸ், பூனம் கெம்னர், தஹியா மேக்ராத், உமா சேத்ரி, அஞ்சலி சர்வானி, கெளஹர் சுல்தானா, கிராந்தி காட், ராஜேஸ்வரி கெய்க்வாட், சல்மா தாகோர், சோபி எஸ்லேஸ்டோன், அலனா கிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியை கேப்டனாக தீப்தி ஷர்மா () வழிநடத்துகிறார்.