Match 15: UPW Vs GG | Toss Update | WPL 2025 (Photo Credit: @WPLT20 X)

மார்ச் 03, லக்னோ (Cricket News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League WPL 2025) போட்டியில், இன்று நடைபெறும் 15 வது ஆட்டத்தில் உபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் (UP Warriorz Vs Gujarat Giants) அணிகள் மோதுகின்றன. உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடும். ஏனெனில், உபி அணிக்கு சொந்த மண்ணில் விளையாடவுள்ள முதல் ஆட்டம் இது ஆகும். குஜராத் அணி சரிவில் இருந்து மீண்டு எழ போராடும். UPW Vs GG: பெண்கள் பிரீமியர் லீக் 2025: உபி வாரியர்ஸ் Vs குஜராத் ஜெயிண்ட்ஸ்.. இன்று மோதல்.. எங்கு? எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? 

டாஸ் வென்று உபி அணி பௌலிங்:

இன்று போட்டியில் டாஸ் வென்ற உபி வாரியர்ஸ் அணி, பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் குஜராத் அணி பேட்டிங் செய்கிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி, ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி செயலியில் நேரலையில் பார்க்கலாம். தமிழ் மொழியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) பக்கத்திலும் பார்க்கலாம்.

இன்று களமிறங்கும் வீரர்கள் விபரம்:

குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் சார்பில் பெத் மூனி, பார்தி ஃபுல்மாலி, ஹர்லீன் தியோல், டியான்ட்ரா டாட்டின், ஆஷ் கார்ட்னர், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், தயாளன் ஹேமலதா, காஷ்வீ கவுதம், தனுஜா கன்வர், மேக்னா சிங், பிரியா மிஸ்ரா ஆகியோர் விளையாடுகின்றனர். உபி வாரியர்ஸ் அணியின் சார்பில் கிரண் நவ்கிரே, ஜார்ஜியா வோல், விருந்தா தினேஷ், தீப்தி ஷர்மா, ஸ்வேதா செஹ்ராவத், கிரேஸ் ஹாரிஸ், உமா செத்ரி, சினெல்லே ஹென்றி, சோஃபி சௌர்டானா, க்ரண் சௌர்டிமா ஆகியோர் விளையாடுகின்றனர்.

டாஸ் வென்று தீப்தி சர்மா பௌலிங் தேர்வு:

உபி வாரியர்ஸ் & குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் சார்பில் விளையாடவுள்ள வீரார்கள்: