RCB Vs MI | Match 7 | WPL 2025 (Photo Credit: @WPLT20 X)

பிப்ரவரி 20, பெங்களூர் (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA WPL 2025) போட்டியில், இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி மோதுகிறது. இந்த ஆட்டம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் எம். சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில், இரவு 07:30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 6 ஆட்டங்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்ற நிலையில், இன்று ஏழாவது ஆட்டம் பெங்களூரில் நடைபெறுகிறது. பெங்களூரு - மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. RCB Vs MI WPL 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ்; பெண்கள் பிரீமியர் லீக் 2025.. உங்கள் பெங்களூரில் இன்று.! 

ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) விக்கெட்:

இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது. பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் மந்தனா, அணிக்கு நல்ல தொடக்கத்தை உறுதி செய்தார். அவர் 13 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸர் என 26 ரன்களை விளாசிய நிலையில், சப்னிம் இஸ்மாயில் பந்தை எதிர்கொண்டு 2.4 வது ஓவரில் தனது விக்கெட்டை கேட்சில் பறிகொடுத்து வெளியேறினார். இன்று அவரின் ஆட்டம் அதிரடியாக தொடங்கியது. அதேபோல, பெங்களூர் மைதானத்தில் போட்டியின் தொடக்கத்தின்போது ரசிகர்கள் விண்ணைப்பிழைக்கும் வகையில் உரத்த குரலை எழுப்பி மகிழ்ந்தனர்.

போட்டி தொடங்கிய போது மந்தனாவுக்கு உற்சாகம் ஏற்படுத்தும் வகையில், உரக்க கத்திய ரசிகர்கள்:

டாஸ் வென்று மும்பை அணி பவுலிங் தேர்வு: