MI Vs GG | WPL 2025 (Photo Credit: @WPLT20 X)

மார்ச் 13, மும்பை (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League) போட்டியில், இன்று எலிமினேட்டர் ஆட்டம் நடைபெற்று வருகிறது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தேர்வாகிவிட்ட நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தினை தக்கவைத்த மும்பை மற்றும் குஜராத் பெண்கள் (Mumbai Indians Vs Gujarat Giants WPL 2025) அணி இன்று எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் டெல்லியை எதிர்கொள்ளும். எலிமினேட்டர் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி, பீல்டரிங் தேர்வு செய்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. WPL 2025 Eliminator: பெண்கள் பிரீமியர் லீக் 2025: இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது யார்? மும்பை - குஜராத் அணிகள் மோதல்.. விபரம் இதோ.! 

MI Vs GG | WPL 2025 (Photo Credit: @WPLT20 X)
MI Vs GG | WPL 2025 (Photo Credit: @WPLT20 X)

மும்பை அணி ரன்கள் குவிப்பு:

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில், இன்று இரண்டு வீரர்கள் அரைசதம் கடந்து அசத்தினர். யாஸ்திகா பாட்டியா 14 பந்துகளில் 15 ரன்கள் அடித்து இருந்தார். ஹெய்லே 50 பந்துகளில் 77 ரன்கள் அடித்து அரைசதம் கடந்தார். நடாலி சிவர் 41 பந்துகளில் 77 ரன்கள் அடித்து அசத்தினார். ஹர்மன் ப்ரீத் (Harmanpreet Kaur) 11 பந்துகளில் 36 ரன்கள் அடித்து அசத்தினார். போட்டியின் முடிவில் மும்பை அணிகள் 213 ரன்கள் எடுத்தது. இதனால் குஜராத் அணியின் வெற்றிக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாட் சிவிர் (Nat Sciver-Brunt) அசத்தல் பேட்டிங்:

ஹாயிலே மெத்திவ்ஸ் (Hayley Matthews) அசத்தல்:

டாஸ் வென்று குஜராத் அணி பௌலிங் தேர்வு: