மார்ச் 01, பெங்களூர் (Cricket News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League 2025) போட்டியில், இன்று பெங்களூர் மா. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் கிரிக்கெட் அணி - டெல்லி கேபிட்டல்ஸ் கிரிக்கெட் அணி (Royal Challengers Bengaluru Vs Delhi Capitals Women's WPL 2025) மோதியது. டாஸ் வென்ற டெல்லி அணி பௌலிங் தேர்வு செய்தது. இதனால் பெங்களூர் அணி பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. டேனி வாட் 18 பந்துகளில் 21 ரன்கள், எலிசி பெர்ரி 47 பந்துகளில் 60 ரன்கள், ராகவி பிஸ்ட் (Raghvi Bist) 32 பந்துகளில் 33 ரன்கள், ஜியார்ஜியா 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்தனர். இதனால் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. RCB Vs DC Women's WPL 2025: 20 ஓவரில் திணறித்திணறி 147 ரன்கள் சேர்த்த பெங்களூர்.. சொந்த மண்ணில் ஆறுதல் வெற்றி கிடைக்குமா? 

டெல்லி மாஸ் வெற்றி:

டெல்லி கிரிக்கெட் அணியின் சார்பில் களமிறங்கியவர்களில் மெக் லேனிங் (Meg Lanning) 12 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து வெளியேறினாலும், சபிலி வர்மா (Shafali Verma) 43 பந்துகளில் 80 ரன்கள் அடித்து விளாசி இருந்தார். இறுதி வரை ஆட்டமும் இழக்கவில்லை.  அதேபோல, ஜெஸ் ஜோனாஸன் 38 பந்துகளில் 61 ரன்கள் அடித்து விளாசினார். ஷபிலி - ஜெஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். 15.3 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு, 151 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி அடைந்தது.

பெங்களூருக்கு மிகப்பெரிய தோல்வி:

பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி அணி அடுத்தடுத்து 4 படுதோல்வியை சந்தித்துவிட்டது. திங்கள் அன்று லக்னோ மைதானத்தில் ஆட்டம் நடைபெறுகிறது. பெங்களூர் அணி சொந்த மண்ணில் விளையாடும்போது, டபிள்யுபிஎல் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. அடுத்தடுத்த தோல்வியின் காரணமாக, பெங்களூர் சொந்த மண்ணில் மிகப்பெரிய தோல்வியை எதிர்கொண்டு, நீண்ட மனவலியுடன் மண்ணில் இருந்து வெளியேறுகிறது.

பெர்ரி சிறப்பாக கேட்ச் பிடித்த காட்சிகள்:

ஒரே ஓவரில் 2 விக்கெட் எடுத்த சரணி:

எலிசி பெர்ரியின் அசத்தல் பேட்டிங்:

ஜெஸ் ஜொனாசன் (Jess Jonassen) அசத்தல் பேட்டிங்:

அம்மாடியோ.. தாவி கேட்ச் பிடித்த பெர்ரி:

 சிக்ஸர் அடித்து ஷபிலி வர்மா அசத்தல் ஆட்டம்: