பிப்ரவரி 24, பெங்களூர் (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League 2025) போட்டியில், இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உபி வாரியர்ஸ் (RCB Vs UP Warriorz Women's Premier League 2025) அணிகள் மோதிய ஆட்டத்தில், டாஸ் வென்ற உபி வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூர் அணி பேட்டிங் செய்ய, அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்களில் ஸ்மிருதி மந்தனா 9 பந்துகளில் 6 ரன்கள், டேனி வாட் 41 பந்துகளில் 57 ரன்கள், எலிசி பெர்ரி 50 பந்துகளில் 84 ரன்கள் அதிகபட்சமாக அடித்திருந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்த பெங்களூர் அணி 180 ரன்கள் எடுத்தது. RCB Vs UPW: அடித்து நொறுக்கிய ஆர்சிபி... டேனி வாட், எலிசி பெர்ரி அரை சதம் கடந்து அபாரம்.. உபி வாரியஸ் அணிக்கு 181 ரன்கள் இலக்கு.! 

சமனில் முடித்த ஆட்டம்:

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உபி வாரியர்ஸ் அணி களமிறங்கியது. தீப்தி சர்மா தலைமையிலான உபி வாரியர்ஸ் பெண்கள் கிரிக்கெட் அணியின் சார்பில் களமிறங்கிய நவ்கிரே 12 பந்துகளில் 24 ரன்னும், விரிந்தா 10 பந்துகளில் 14 ரன்னும், தீப்தி ஷர்மா 13 பந்துகளில் 25 ரன்னும், ஷுவெதா செராவத் 25 பந்துகளில் 31 ரன்னும், உமா சேத்ரி 11 பந்துகளில் 14 ரன்னும், சமியா 8 பந்துகளில் 14 ரன்னும், சோபி 19 பந்துகளில் 33 ரன்னும் அடித்தனர். இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. சூப்பர் ஓவர் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

ஷேஹ் ராணா அசத்தல் பேட்டிங்:

ஸ்மிருதி மந்தனாவின் விக்கெட் எடுத்த தீப்தி ஷர்மா:

டன்னி வாட் அசத்தல்:

மைதானத்தை பிரித்தெடுக்கும் பெர்ரி:

சோபியன் அதிரடி ஆட்டம்: