Annabel Sutherland Takes Amelia Kerr Wicket (Photo Credit: @WPLT20 X)

பிப்ரவரி 28, பெங்களூர் (Cricket News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் (TATA Women's Premier League 2025) ஆட்டத்தில், 13 வது இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணி மோதியது. மும்பை அணி டாசில் தோற்று முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்தது. இதனால் 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் செய்து வருகிறது. இதனிடையே, முதல் பகுதியில் மும்பை அணி பேட்டிங் செய்தது. DC Vs MI: பெண்கள் பிரீமியர் லீக்.. டெல்லி - மும்பை அணிகள் ஆட்டம்... டாஸ் வென்று டெல்லி பந்துவீச்சு.! 

அனபெல் அசத்தல் கேட்ச்:

அப்போது, மும்பை அணியின் வீராங்கனை அமலினா கெர் 18 பந்துகளில் 17 ரன்கள் அடித்த நிலையில், 18 வது பந்தை எதிர்கொண்டார். டெல்லி அணியின் வீராங்கனை மின்னு மணி வீசிய பந்தை 16.3 வது ஓவரில் எதிர்கொண்ட கெர், தூக்கி அடித்ததில், அனபெலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். இவர் கேட்ச் பிடித்த போது, வானில் சில அடி தூரம் எழும்பி பாய்ந்து அதிரடியாக கேட்ச் பிடித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி, அனபெல் சுதர்லேண்ட்-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அனபெல் சுதர்லேண்ட் (Annabel Sutherland) பாய்ந்து கேட்ச் பிடித்த காட்சி: