பிப்ரவரி 28, பெங்களூர் (Cricket News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் (TATA Women's Premier League 2025) ஆட்டத்தில், இன்று 13 வது போட்டி, பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணி (Mumbai Indians Vs Delhi Capitals Women's 2025) மோதிக்கொண்ட ஆட்டத்தில், டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனால் மும்பை அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் சார்பில் விளையாடியவர்களில் ஹைலே 25 பந்துகளில் 22 ரன்னும், நடாலி 22 பந்துகளில் 18 ரன்னும், ஹர்மன்பிரீத் 16 பந்துகளில் 22 ரன்னும், அமெலியா 18 பந்துகளில் 17 ரன்னும், அமஞ்சோத் 10 பந்துகளில் 17 ரன்னும் எடுத்திருந்தனர். டெல்லி அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் மின்னுமணி, ஜேசு ஆகியோர் தலா 3 விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர். 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், டெல்லி அணி பேட்டிங் செய்தது. Annabel Sutherland: அடேங்கப்பா.. என்ன ஒரு டெடிகேஷன்.. பாய்ந்து கேட்ச் பிடித்த அனபெல்., குவியும் பாராட்டுக்கள்.! 

டெல்லி அணி திரில் வெற்றி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேற்றம்:

டெல்லி அணியின் சார்பில் களமிறங்கிய கேப்டன் மெக் லேனிங் (Meg Lanning) இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 49 பந்துகளில் அரைசதம் கடந்து 60 ரன்கள் விளாசி இருந்தார். ஷபிலி வர்மா 28 பந்துகளில் 43 ரன்கள் அடித்து இருந்தார். ஜெமியா 10 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 14.3 ஓவர் முடிவில் ஒரே ஒரு விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 124 ரன்கள் இலக்கை அடைந்து வெற்றி அடைந்தது. 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணிக்கு வெற்றி கிடைத்தது. இதனால் புள்ளிப்பட்டியலிலும் டெல்லி அணி தான் எதிர்கொண்ட 6 போட்டிகளில் 4ல் வெற்றி அடைந்து, 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. தான் எதிர்கொண்ட 5 போட்டிகளில் 3ல் வெற்றி அடைந்து மும்பை அணி 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ராயல் பெங்களூர் அணி 5ல் 2 வெற்றி அடைந்து 4 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் டெல்லி அணி:

அனபெல் சுதர்லேண்ட் (Annabel Sutherland) பாய்ந்து கேட்ச் பிடித்த காட்சி:

டெல்லி கேபிட்டல்ஸ் அணி முன்னேற்றம்:

சபிலி வர்மா வெளுத்து வாங்கிய காட்சிகள்:

5 ஓவரில் 94 ரன்கள் எடுத்து 4 விக்கெட் இழந்து திணறிய மும்பை அணி:

ஹெய்லேய் விக்கெட் காலி: