Match 16: WPL 2025 | UP Warriorz Vs Mumbai Indians (Photo Credit: @WPLT20 X)

மார்ச் 06, லக்னோ (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's WPL 2025) போட்டியில், இன்று 16 வது ஆட்டம் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. யுபி வாரியர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (UP Warrioriz Vs Mumbai Indians) கிரிக்கெட் அணிகள் இடையே இன்று நடைபெறும் ஆட்டம், இரண்டு அணிகளுக்கும் முக்கியமானது. இறுதிக்கட்டத்தை நோக்கி பயணம் செய்து வரும் மகளிர் டபிள்யுபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 3 வது இடத்திலும், உபி வாரியர்ஸ் அணி இறுதி இடத்திலும் இருக்கிறது. சொந்த மண்ணில் நடைபெறும் ஆட்டத்தில், வெற்றிகண்டாக வேண்டிய நிலையில் உபி அணியும், புள்ளிப்பட்டியலில் முன்னேறி பிளே ஆப் செல்ல மும்பை அணியும் போராடும். Wiaan Mulder: ஐபிஎல் 2025: ஹைதராபாத் அணியில் முக்கிய மாற்றம்.. காயம் காரணமாக வீரர் விலகல்.. மாஸ் என்ட்ரி கொடுக்கும் வீரர்.! 

உபி வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங்:

இந்நிலையில், டாஸ் வென்ற மும்பை அணி பௌலிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, உப்பி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்ய தயாராகி இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் யாஸ்திகா பாட்டியா, ஹேலி மேத்யூஸ், நடாலி ஸ்கிவர்-ப்ரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர், அமெலியா கெர், சஜனா எஸ், அமஞ்சோத் கவுர், கமலினி ஜி, சமஸ்கிருதி குப்தா ஆகியோர் களமிறங்குகின்றனர். உபி வாரியர்ஸ் அணியின் சார்பில் கிரேஸ் ஹாரிஸ், கிரண் நவ்கிரே, ஜார்ஜியா வோல், விருந்தா தினேஷ், தீப்தி ஷர்மா, ஸ்வேதா செஹ்ராவத், உமா செத்ரி, சினெல்லே ஹென்றி, சோஃபி கெர்ஸ்டோன், சோஃபி கெர்ஸ்டோன் ஆகியோர் விளையாடுகின்றனர்.

டாஸ் வென்று மும்பை பௌலிங் தேர்வு: