ஜூலை 19, புதுடெல்லி (Cricket News): ஆஸ்திரேலியா அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இங்கிலாந்து ரசிகர்களின் மூலமாக உருவாக்கப்பட்ட கேலியான பாடலுக்கு தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
டேவிட் வார்னர் - இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் அதிரடி சம்பவங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் நன்கு அறிந்த விஷயம். இருவரின் ஆட்டமும் கிரிக்கெட் வழக்கியில் ஆவணமாக இருந்தன.
பந்துவீச்சில் மாஸ்க் காண்பித்த ஸ்டூவர்ட், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 17 முறை வார்னரின் விக்கெட்டை கைப்பற்றினார். பேட்டிங்கில் தலைசிறந்து விளங்கிய வார்னர், கடந்த காலங்களில் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்ட வீரர்களில் ஒருவராக இருக்கிறார். Wife Gang Rape: குளிர்பானத்தில் மயக்க மருந்து; மனைவியை நண்பனுடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த கணவன்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
இங்கிலாந்து நாட்டு ரசிகர்கள் வார்னரை கிண்டல் அடிக்கும் விதமாக பாடலையும் பாடி இருந்தனர். இதனை கேட்டு ஆத்திரம் கொள்ளாத வார்னர், அதனை ரசிப்பதாக தெரிவித்து பாராட்டி இருக்கிறார்.
மேலும், நான் அதை விரும்புகிறேன். எப்போதும் பிராட்டை எதிர்கொள்வது நல்ல அனுபவத்தை தரும். பந்துவீச்சில் சிறந்து விளங்கும் பிராட், இடதுகை பந்துவீச்சாளர்களில் சிறந்தவர். நல்லவர். ஜிம்மியும் அதேபோல இப்பட்டியலில் இருக்கிறார் என வார்னர் கூறினார்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள மைதானங்கள் பேட்டிங்குக்கு சவால் நிறைந்தவை ஆகும். இந்திய வீரர்கள் கூட இங்கிலாந்து மண்ணில் சில நேரம் திணற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. டேவிட் வார்னர் தனது வாழ்நாட்களில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 33 டெஸ்ட் ஆட்டங்களில் 836 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.