![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/07/Virat-Kholi-With-Rohit-Sharma-Photo-Credit-Twitter-380x214.jpg)
ஜூலை 27, புதுடெல்லி (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி. இவர்கள் இருவரும் மைதானத்தில் நல்ல பார்ட்னர்ஷிப்புடன் விளையாடும் வீரர்களும் கூட.
இந்த ஜோடி மைதானத்தில் களமிறங்கினால் எதிரணிக்கு கொஞ்சம் கலக்கம் ஏற்படும். ஏனெனில் இருவரும் நின்று அடித்து விளையாட தொடங்கிவிட்டால், அணியின் ரன்கள் அடுத்தடுத்து அதிரடியாக உயரும். Bird ate Pasta: சைஸாக ஐஸ் வைத்து நைசாக பாஸ்தா சாப்பிட்ட குருவி; வாயடைத்துப்போன பெண்மணி..! வைரல் வீடியோ உள்ளே.!
தற்போது இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியை அந்நாட்டில் எதிர்கொண்டு வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர், டெஸ்ட் என மொத்தமாக 10 போட்டிகளில் விளையாடி, இந்திய சுதந்திர தினத்திற்கு முன்பு அணி தாயகம் திரும்புகிறது.
இந்நிலையில், இந்த ஜோடி ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களின் 5000 ரன்களை நிவர்த்தி செய்ய இன்னும் 2 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. விரைவில் அந்த சாதனையை இருவரும் ஜோடியாக படைப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து மிக வேகமாக பார்ட்னர்ஷிப்பில் 5000 ரன்கள் என்ற இலக்கை ஒருநாள் போட்டியில் எட்டி இருக்கின்றனர். இது புதிய சாதனையாக கருதப்படுகிறது.