செப்டம்பர் 05, சென்னை (Tamilnadu News): தமிழ்நாடு சுற்றுசூழல், காலநிலை மாற்றம், வனத்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் சுப்ரியா சாஹு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிவிப்பின்படி, உயிரியல் பூங்கா உட்பட வனத்துறை சார்ந்த இடங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்காக்களில் நிர்வாகத்தின் மேம்பாடு, வளர்ச்சி பணிக்காக கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு நுழைவு கட்டணம் ஏதும் இல்லை. 5 வயது முதல் 17 வயது வரை இருக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 2 அடுக்கு கட்டணம் குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு, ஆசிரியர்களுக்கும் சலுகை வழங்கி தனிநபருக்கு ரூ.20 கட்டணமாக வசூல் செய்யப்படும். Demise of TN Scientist: தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி காலமானார்: கவுண்டவுகளின் குரல் நிசப்தமானது.!
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகைதரும் பெரியோருக்கு நுழைவுக்கட்டணம் ரூ.115ல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்படுகிறது. பேட்டரி வாகனத்தின் கட்டணமும் ரூ.100ல் இருந்து ரூ.150 ஆகவும், வீடியோ கேமிரா ஒளிப்பதிவு கட்டணம் ரூ.500ல் இருந்து ரூ.750 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
சக்கர நாற்காலிகள் கட்டணம் ரூ.25 இனி இரத்து செய்யப்படும். வாகன கட்டணங்கள் அனைத்தும் மணிக்கணக்கில் இருந்து நாட்கணக்கில் என்று நிர்ணயிக்கப்படும். கிண்டி சிறுவர் பூங்காவில் பெரியவர்களுக்கு நுழைவு கட்டணம் ரூ.60 எனவும், 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ரூ.10 எனவும் நிர்ணயிக்கப்படுகிறது. வீடியோ கேமராவுக்கு ரூ.200 கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
குரும்பப்பட்டி உயிரியல் பொங்கவின் நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.50 ஆகவும், 5 வயது முதல் 12 வயது வரை இருக்கும் சிறுவர்களுக்கு கட்டணம் ரூ.10 ஆகவும், வீடியோ கேமிராவுக்கு ரூ.150 ஆகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது. வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.30 ஆகவும், சிறுவர்களுக்கு 5 வயது முதல் 12 வயது வரை ரூ.10 ஆகவும் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வண்டலூர் பூங்கா விடீயோக்களை நேரலையில் பார்க்க இங்கு அழுத்தவும்: https://www.aazp.in/