Mumbai Indian Vs Delhi Capitals Women's WPL 2025 (Photo Credit: @TeamLatestLY)

பிப்ரவரி 15, வதோதரா (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League 2025) கிரிக்கெட் போட்டிகள், பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 15 வரை நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Gujarat Giants Vs Royal Challengers Bangalore Women's T20 WPL 2025) அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 ஆட்டத்தில், பெங்களூர் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, இன்று டெல்லி பெண்கள் கிரிக்கெட் அணி - மும்பை பெண்கள் கிரிக்கெட் அணி (Delhi Capitals Vs Mumbai Indians Women's T20 WPL 2025) மோதுகிறது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்கிறது. DC Vs MI Women's WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக் 2025: இன்று டெல்லி - மும்பை அணிகள் மோதல்.. மேட்ச் அப்டேட் இதோ.! 

மும்பை - டெல்லி அணி வீரர்கள்:

மும்பை இந்தியன்ஸ் அணியில் (Mumbai Indians Women's Squad) ஹேலி மேத்யூஸ், யஸ்திகா பாட்டியா, நடாலி ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்பிரீத் கவுர் (சி), அமெலியா கெர், சஜானா எஸ், அமன்ஜோட் கவுர், ஜிந்திமணி கலிதா, சான்ஸ்கிரித குப்தா, சைக்கா உய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் (Delhi Capials Playing Squad) மெக் லான்னிங் (சி), ஷபாலி வர்மா, ஆலிஸ் கேப்சே, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அன்னாபெல் சதர்லேண்ட், நிகி பிரசாத், சாரா பிரைஸ், ஷிகா பாண்டே, மின் மணி அவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெல்லி கேபிட்டல்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது:

போட்டியில் வெற்றிபெற இருதரப்பு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபடும் காணொளி: