ஜூலை 19, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள திருநின்றவூர், நாச்சியார்சத்திரம், விவேகானந்தர் தெருவில் வசித்து வந்த 17 வயதுடைய சிறுமி 12 ஆம் வகுப்பு படித்து முடித்து இருக்கிறார். சிறுமியின் தந்தை உயிரிழந்துவிட்ட நிலையில், மாணவி தனது தாய் மற்றும் அக்காவுடன் தற்போது வசிக்கிறார். இதனிடையே மாணவி தனது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த இளைஞர் ஒருவருடன் காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் இருவீட்டார்க்கும் தெரியவரவே, எதிர்ப்புகள் எழுந்ததால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பேசாமல் இருந்து வந்துள்ளனர். Trending Video: மதுபோதையில் பாம்பை நூடுல்ஸ் போல கடித்து தின்ற இளைஞர்.. பதறவைக்கும் சம்பவம்.!
அக்காவுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை :
இந்த நிலையில், சிறுமி நேற்று முன்தினம் தனது அக்காவின் செல்போனில் இருந்து காதலனுக்கு தொடர்பு கொண்டு பேச முற்பட்டுள்ளார். காதலன் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "அம்மாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு இங்கே இருக்க பிடிக்கவில்லை. செத்து விடலாம் என தோணுகிறது. பையன் குடும்பத்தை சும்மா விடக்கூடாது" ஆகிய தகவல்களை அக்காவுக்கு அனுப்பிவிட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.