ஏப்ரல் 22, சென்னை (Health Tips): நம் உணவில் இன்றியமையாத ஒன்று காய்கறிகள் ஆகும். இவைகள், நம் உணவுத் தேவையை நிறைவு செய்து, உடலுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. அந்தவகையில், மஞ்சள் பூசணியின் மருத்துவ பயன்கள் பற்றி இதில் பார்ப்போம். Woman Raped: வேலை வாங்கி தருவதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்; காவல்நிலையத்தில் பெண் பரபரப்பு வாக்குமூலம்..!

மருத்துவ பயன்கள்:

பூசணி விதைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு, அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வைத்துக்கொண்டு, தலையில் தேய்த்து வந்தால் பேன் தொல்லை நீங்கும். மேலும், முடி வளர்ச்சி (Hair Growth) அதிகமாகும். தேவையான பால் மற்றும் சர்க்கரை இதனோடு பூசணி விதைகளை மிக்ஸியில் போட்டு அரைத்து பருகி வந்தால், உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி அளிக்கும். பூசணி சாறு அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமடையும். பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் தீரும்.

பூசணி விதைகளை பொடியாக்கி, சிறிது சர்க்கரை சேர்த்து இரவு தின்று, மறுநாள் காலையில் அரை தேக்கரண்டி விளக்கெண்ணெய் அருந்தினால் வயிற்றிலுள்ள நாடாப்புழுக்கள் நீங்கிவிடும். பூசணி சதையை சூடாக்கி அதனை நன்கு பிசைந்து புண்கள் மேல் பூசி வர புண்கள் ஆறும். இதன் விதைகளை தூளாக்கி, தண்ணீரில் பிசைந்து பூச்சி கடி, பூரான் கடித்த இடத்தில் பூசி வந்தால் விஷத்தன்மையை முறித்துவிடும். பூசணியை உணவில் அடிக்கடி சாப்பிட்டு வர உடல் எடை குறைத்து, ரத்த சோகை பிரச்சனைகளை நீக்கி நரம்புகளை வலுப்படுத்துகிறது.