Gun File pic (Photo Credit: Pixabay)

மே 27, சென்னை (Chennai News): சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள கும்மாளம்மன் கோயில் தெருவை சேர்ந்த தொழிலதிபர் மகன் பிரகலாத் நரசிம்மன் (வயது 32). இவர், இன்று (மே 27) காலை வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை (Suicide) செய்துகொண்டார். உடனே, இதுகுறித்து அவரது குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். Chennai News: தலைக்கவசம் அணியாததால் சோகம்.. ரோடு பள்ளத்தால் மெக்கானிக் பலி.!

போலீஸ் விசாரணை:

தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.