Actress Vijayalakshmi/Politician Seeman (Photo Credit: Twitter)

செப்டம்பர் 1, சென்னை (Political News): கடந்த  2011 ஆம் ஆண்டு, நடிகை விஜயலட்சுமி, நடிகர், இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி உள்ளதாக தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு, நடிகை விஜயலட்சுமி கடுமையான மன உளைச்சல் காரணமாக தற்கொலை முயற்சி செய்தார். இந்த நிலையில் தற்போது நடிகை விஜயலட்சுமி  சீமான் மீது நான்கு பக்கங்கள் கொண்ட குற்றச்சாட்டு அறிக்கையை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளார். அதனால் போலீசார் இந்த வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்கி இருக்கின்றனர். Jawan on Burj Khalifa: புர்ஜ் கலீபாவை தெறிக்கவிட்ட ஷாருக்கானின் ஜவான் திரைப்பட டிரைலர்; கொண்டாட்டத்தில் ஷாருக் ரசிகர்கள்.!

மிகுந்த வருத்தத்துடனும் கண்ணீருடனும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகை விஜயலட்சுமி, இந்த போராட்டத்தில் தன்னுடைய வாழ்வையே தொலைத்து விட்டதாகவும், மேலும்  நடிகர் சீமான் கைது செய்யப்படும் வரை  இந்த போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளார்.

நடிகர் சீமான் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் பெயரில், போலீசார் நடிகை விஜயலட்சுமியை மெஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தி, வாக்குமூலம் பதிவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நேற்று கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகை விஜயலட்சுமி, பண பரிவர்த்தனைகள், ஆடியோ ஆதாரங்கள், ஹோட்டல் அறையில் தங்கியதற்கான ஆதாரங்கள்  போன்றவற்றை போலீசாரிடம் அளித்துள்ளதாக தெரிகிறது.

சீமான் குறித்து ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாரின் மீது அதிமுக (ADMK) அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தற்போது  ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்  திமுக (DMK) அரசு தன்னுடைய குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுக்கும்  என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.