Gold Silver Price (Photo Credit: Pixabay)

ஜூலை 12, சென்னை (Gold Price Today): மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்கள் என பல காரணத்தால் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை (Gold Price) சவரனுக்கு ரூ.74,000ஐ கடந்திருந்தது. Karur News: பயிற்சி மருத்துவர்கள் அலட்சியம்?.. குழந்தை பிரசவித்த தாய் அதிக ரத்தப்போக்கால் மரணம்.! 

படிப்படியாக உயரும் தங்கம் விலை :

சவரன் தங்கம் விலை அதன் உற்பத்தி, நுகர்வு உட்பட பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு தினமும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் பங்குச்சந்தை நிலவரத்தை பொருத்தும் தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். ஜூலை மாதத்தின் தொடக்கத்திலிருந்து அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை இந்த வார தொடக்கத்திலேயே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

ஜூலை 12ஆம் தேதியான இன்று சனிக்கிழமை, தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இன்று (ஜூலை 12) 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.9,140க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.73,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் (Silver) விலையை பொறுத்தவரையில் ரூ.4000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1,25,000 க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் குறைந்த தங்கம் விலை இந்த வாரத்தில் உயர்ந்து ரூ.73,000 கடந்து விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்வது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.