ஜூலை 11, கரூர் (Karur News): கரூர் மாவட்டத்திலுள்ள கடவூர் முத்தகவுண்டன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவர் கோயம்புத்தூரில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். சுரேஷின் மனைவி யோகப்பிரியா. தம்பதிகள் இருவருக்கும் கடந்த ஆண்டு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நடந்து முடிந்துள்ளது. இதனிடையே தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த யோகப்பிரியா கடந்த ஜூலை 02 ஆம் தேதி பிரசவத்துக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். Heatwave Death: வாட்டி வதைக்கும் வெயில்.. 10 நாட்களில் வெப்ப அலைக்கு 2300 பேர் உயிரிழப்பு.!
அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மரணம் :
அங்கு அவருக்கு ஜூலை 5 ஆம் தேதி அறுவை சிகிச்சையில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், சில மணி நேரத்திற்கு பின் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண்மணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த உறவினர்கள் பயிற்சி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதே யோகப்பிரியாவின் மரணத்திற்கு காரணம் என வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் விசாரணை :
மேலும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக பசுபதிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.