ஜனவரி 03, சென்னை (Chennai): அனுதினமும் ஒவ்வொரு வகை உணவுகளை சமைத்து சாப்பிடும் நாம், எப்போதாவது புதுவிதமான உணவுகளை நாடுவோம். பெரும்பாலும் வெளியூரில் பணியாற்றும் நபர்கள், அவசரத்திற்கு செய்து சாப்பிடும் வகையிலான உணவுகளை தேர்வு செய்வதும் வழக்கம். ஆந்திரா (Paruppu Podi) கைவண்ணத்தில் தயாராகும் உணவகத்தில், சாப்பிட பருப்பு பொடியும் வழங்கி இருப்பார்கள். இது அரிசி சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இந்த அரிசி சாத ஆந்திரா பொடியை நாம் வீட்டிலேயும் செய்து சாப்பிடலாம். அதனை எப்படி செய்யலாம் என இன்று தெரிந்துகொள்ளலாம். Virat Kohli On Ram Siya Ram Song: ஒருகணம் ஸ்ரீ ராமராக மாறிய விராட் கோலி; இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையே டெஸ்ட் தொடரில் நடந்த சம்பவம்.!
ஆந்திரா சாதப்பொடி செய்ய தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1 கிண்ணம்,
உளுந்தம்பருப்பு - 1 கிண்ணம்,
துவரம்பருப்பு - 1 கிண்ணம்,
காய்ந்த மிளகாய் - 15,
எள்ளு - 1 கரண்டி,
மிளகு - 1 கரண்டி,
சீரகம் - 1 கரண்டி,
பெருங்காயம் - 1 கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
புளி - சிறிதளவு,
பூண்டு - 8 பற்கள்,
கறிவேப்பில்லை - சிறிதளவு.
செய்முறை:
வானெலியில் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு உட்பட அனைத்து பொருட்களையும் சேர்த்து மிதமான தீயில் நன்கு வறுத்து ஆறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றில் எள்ளு மட்டும் இறுதி பருவத்தில் சேர்த்துக்கொள்வது நல்லது. சுவை கூடுதலாக வேண்டுவோர் சிறிதளவு அரிசியையும் எள்ளுடன் சேர்த்துக்கொள்ளலாம். Miracle Coconut Tree: 3 கிளைகள் கொண்ட அதிசய தென்னை மரம்... வைரலாகும் அதிசய காட்சி..!
இந்த கலவை அனைத்தும் ஆறியதும் அனைத்தையும் மிக்சியில் சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பொடியை அரைத்து இறுதி பருவத்தில் சிறிதளவு பெருங்காயத்தூள் கலந்துகொள்ளலாம். இந்த பொடியை சுத்தமான பாட்டிலில் நிரப்பி வைத்து, சூடான சாதத்தில் நெய் ஊற்றி பொடியுடன் சேர்த்து சாப்பிடலாம். காரத்திற்கு ஏற்ப மிளகாயை சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஆந்திரா பொடியை இட்லி, தோசை போன்றவற்றைக்கும் எண்ணெய் ஊற்றி பயன்படுத்தி சாப்பிடலாம். நல்ல சுவையுடன் இருக்கும்.