AIADMK Party Flag - Death File Picture (Photo Credit: Wikipedia Commons / Pixabay)

பிப்ரவரி 15: ஈரோடு (Erode) மாவட்டம் ஈரோடு கிழக்கு (Erode East Assembly By Poll) சட்டப்பேரவை தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக (AIADMK Alliance) தலைமையில் ஒரு அணியும், திமுக (DMK Alliance) தலைமையில் மற்றொரு அணியும் என களத்தில் பலப்பரீட்சை தீவிரமாக நடந்து வருகிறது. இதனைத்தவிர்த்து அமமுக (AMMK), தேமுதிக (DMDK), நா.த.க (NTK) சார்பிலும் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

இதனால் அரசியல் கட்சிகள் தங்களின் பிரச்சார தூண்களான (Election Campaign) தொண்டர்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் களமிறக்கியுள்ளன. இவர்கள் தங்களது கட்சிகளுக்காக வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி (Panruti, Cuddalore), அண்ணா கிராமத்தை சேர்ந்தவர் கந்தன் (வயது 51).

இவர் அண்ணா கிராமம் அதிமுக ஒன்றிய (AIADMK Woerker) செயலாளராக இருக்கிறார். தேர்தல் பணிக்காக ஈரோட்டுக்கு அழைத்து வரப்பட்ட கந்தன், தீவிர களப்பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். நேற்று ஈரோடு பி.பி அஹ்ரகாரம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கூடம் அருகே தனது பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். Instagram Love Tragedy: இன்ஸ்டாகிராம் காதலனை நம்பி கூலித்தொழிலாளியான 22 வயது இளம்பெண்.. காதலனை நம்பி கணவனை கைவிட்டதால் கிடைத்த ஆப்பு.!

இரட்டை இல்லை சின்னத்திற்கு வாக்குகளை அவர் சேகரித்துக்கொண்டு இருக்கும்போதே, காலை 10 மணியளவில் திடீரென அருகில் இருந்தோரிடம் நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார். அவரை மீட்ட அதிமுக தொண்டர்கள் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் (Private Hospital) மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் விரைந்து அவசர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி கந்தன் பரிதாபமாக நேற்று மதியம் உயிரிழந்தார். அவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குடும்பத்தினர் மற்றும் அவர்சார்ந்த அரசியல் கட்சியினர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 15, 2023 08:35 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).