VCK Supporter Ramesh (Photo Credit: Twitter)

ஏப்ரல் 27, சென்னை (Chennai Crime News): சென்னையில் உள்ள கே.கே நகர் (K.K Nagar, Chennai) அம்பேத்கர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 40). இவர் விடுதலை சிறுதலை கட்சியில் (Viduthalai Chiruthaigal Katchi-VCK) கே.கே நகர் பகுதியின் செயலாளராக பொறுப்பில் இருந்து வந்துள்ளார். திருமணம் முடிந்து மனுவை மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர்.

ரமேஷ் ரியல் எஸ்டேட் தொழில் (Real Estate Business) செய்து வரும் நிலையில், இன்றைய நாளின் காலை நேரத்தில் 8 மணியளவில் பாரதிதாசன் சாலை பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் இருக்கும் தேநீர் கடைக்கு தேநீர் சாப்பிட சென்றுள்ளார்.

அந்த சமயம் நண்பர்களுடன் அவர் உரையாடிக்கொண்டு இருக்க, அப்போது அதிவேகத்தில் காரில் வந்த மர்ம கும்பல் ரமேஷை சரமாரியாக கத்தியால் வெட்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே வி.சி.க பிரமுகர் ரமேஷ் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். Naxal Attack Video: சத்தீஸ்கர் நக்சல் தாக்குதலில் 10 அதிகாரிகள் பலியான விவகாரம்; நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வெளியானது..!

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த எம்.ஜி.ஆர் நகர் காவல் துறையினர், ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு அருகே உள்ள சி.சி.டி.வி கேமிரா கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றவாளிகளின் அடையாளம் சேகரிக்கப்பட்டு வருகிறது. கொலையான ரமேஷ் விசிக கே.கே நகர் பகுதி செயலாளராக இருந்துள்ளார். அவரின் மீது தி நகர், வடபழனி, எம்.கே.பி நகர், கோடம்பாக்கம், எம்.ஜி.ஆர் நகர், கே.கே நகர் உட்பட பல காவல் நிலயங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

அவரின் மீதான தொடர் புகார்கள் காரணமாக கட்சியின் தலைமை அவரிடம் இருந்த பொறுப்பை பறித்து, அடிப்படை உறுப்பினரமாக மட்டும் அவரை வைத்துக்கொண்டுள்ளது. இதற்கிடையில் தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.