PM Narendra Modi Selfie with French President Immanuel Macron (Photo Credit: ANI)

ஜூலை 15, பாரிஸ் (World News): இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றிருந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அந்நாட்டின் உயரிய அரசு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்திய பிரதமருக்கு பிரான்ஸ் நாட்டின் அரசு கொடுக்கும் உயரிய விருதை பெற்ற முதல் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றார். விருதுக்கு ஒட்டுமொத்த இந்தியர்களின் சார்பில் நன்றியையும் பதிவு செய்தார். Chennai Baby: குழந்தையின் பாலினம் தெரியாமல் பரிதவித்து விழிபிதுங்கும் தாய்; யாரின் மீது தவறு?.. ஒரு தாயின் கண்ணீர்.!

PM Modi French Visit Ends | Visual from Video (Photo Credit: ANI)

அதனைத்தொடர்ந்து, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர், இந்தியர்களிடையே உரையாற்றினார். பின், அரசு மாளிகையில் பிரான்ஸ் - இந்தியா நட்புறவு, எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் உயர்மட்ட ஆலோசனை நடத்தப்பட்டது.

பிரான்சில் உள்ள முதலீட்டாளர்களை ஈர்க்கும் பொருட்டும், இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் பிரதமர் மோடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் பயணத்தை அதிகாரபூர்வமாக நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஐக்கிய அரபு (United Arab Emirates UAE) அமீரத்திற்கு புறப்பட்டார்.