பிப்ரவரி 04, பாடியநல்லூர்: சென்னையில் உள்ள செங்குன்றம் (Red Hills, Chennai), பாடியநல்லூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சந்துரு. இவரின் மகள் கனகப்பிரியா (வயது 23). இவர் செங்குன்றம் தனியார் வங்கியில் (Bank Employee) பணியாற்றி வருகிறார்.
கனகப்பிரியாவிற்கும் - அப்பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் (Marriage) செய்ய முடிவெடுத்த பெற்றோர், அதற்காக கடந்த ஆகஸ்ட் மாதமே நிச்சயதார்த்தத்தை (Engaged) முடித்துள்ளனர்.
இதற்கிடையில், மணமகன் வீட்டார் சார்பில் திருமணத்திற்கு (Wedding) சிறிது கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்து கடந்த சில நாட்களாகவே கனகப்பிரியா மனவேதனையுடன் இருந்து வந்துள்ளார். Velachery North Indian Murder: வேளச்சேரியில் வடமாநில இளைஞருடன் சென்னை சிறார்கள் மோதல்.. 7 பேர் கும்பலால் பிழைக்க வந்த தொழிலாளி அடித்தே கொலை.!
இந்த நிலையில், விரக்தியின் உச்சத்திற்கு சென்ற கனகப்பிரியா தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை (Suicide by Hanging) செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த செங்குன்றம் காவல் துறையினர், கனகப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கனகப்பிரியாவின் தற்கொலை விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்மணி தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.