Rain Tamilnadu (Photo Credit: @WeatherRadar_IN X)

மே 25, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 39.44° செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 21.0° செல்சியஸும் பதிவாகியுள்ளது.

இன்றைய வானிலை (Today Weather):

தென்மேற்கு பருவமழை கேரளாவில் நேற்று (24-05-2025) துவங்கி, தமிழகத்திலும் அநேக பகுதிகளில் பரவியுள்ளது. இன்று (25-05-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. Dindigul News: பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு.. நடத்துனரின் சாமர்த்திய செயல்.!

அவலாஞ்சியில் அதிகபட்ச மழை :

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி அவலாஞ்சியில் 21 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. அதேபோல பைன் மரக்காடு, தொட்டபெட்டா உட்பட முக்கிய சுற்றுலா தளங்களும் மூடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. வனத்துறை சார்பாக சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு வர வேண்டாம் எனவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு படையினர் நீலகிரி மாவட்டத்தில் முழுவதும் தயார் நிலையில் இருக்கின்றனர்.

சுற்றுலா பயணிகளுக்கு உத்தரவு :

நீலகிரியை போல சதுரகிரி மலைக்கும் செல்ல வனத்துறை அனுமதி வழங்கவில்லை. சதுரகிரி மலையை பொறுத்த அளவில் திடீரென எங்கோ பெய்யும் மழையால் காட்டாற்று வெள்ளம் வரும். இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல காலை 10 மணிவரையில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.