Chennai Rains | File Pic (Photo Credit: @Unmai_Kasakkum X)

மே 30, நுங்கம்பாக்கம் (Chennai News): வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். TVK Vijay: மத்திய, மாநில அரசுகளுக்கு நேரடி கண்டனம்.. கல்வி விருது விழாவில் உச்சகட்ட கொந்தளிப்பில் விஜய்.! 

இன்று மதியம் 1 மணிவரை கொட்டப்போகும் மழை :

இந்நிலையில் தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு :