
மே 30, மாமல்லபுரம் (Chennai News): செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை மற்றும் தவெக சார்பில் சான்றிதழ் வழங்கி இன்று கௌரவிக்கிறார். மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த விழாவில் முதற்கட்டமாக இன்று 500க்கும் அதிகமான மாணவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
மாணவர்களிடம் தவெக தலைவர் விஜய் பேசியது :
இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, "My Dear Young Leaders & Parents.. எல்லாரும் எப்படி இருக்கீங்க.. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களின் அழகிய சாதனைக்கு வாழ்த்துக்கள். படிப்பில் சாதிக்க வேண்டும் தான், அதுக்காக ஒரேயொரு படிப்பில் அழுத்தம் கொடுக்காதீர்கள். நீட் மட்டும்தான் உலகமா? நீட்-ஐ தாண்டி இந்த உலகம் மிகப்பெரியது. அதில் நீங்கள் சாதிக்க வேண்டியது மிகப்பெரியது. ஜனநாயகம் இருந்தால் தான் உலகமும், உலகத்தில் உள்ள துறைகளும் தன்னிச்சையாக இருக்கும். அனைவர்க்கும் அது கிடைக்கும். அவர்களின் ஜனநாயக கடமையை செய்ய சொல்லுங்கள். Gold Silver Price: குறைந்த வேகத்தில் 72,000ஐ நோக்கி.. படிப்படியாக உயரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?.!
சாதி, மதம் பார்க்க வேண்டாமென அறிவுரை :
காசு கொடுத்து ஜெயிப்பவர்களை நினைக்க வேண்டாம். உங்களின் பெற்றோரிடமும் சொல்லுங்கள் பணம் வாங்க வேண்டாம் என. உங்களிடம் கொள்ளையடித்த பணத்தை அவர்கள் வண்டிவண்டியாக கொட்டப்போகிறார்கள். My Dear Parents குழந்தைகளின் விஷயத்தில் Force செய்யாதீங்க. அவர்களுக்கு பிடித்ததை தெரிந்துகொண்டு வழிநடத்துங்கள். அவர்களுக்கு பிடித்த துறையில் கட்டாயம் சாதிப்பார்கள். சாதி-மதத்தை வைத்து பிரிவினையை வளர்க்கும் நபர்களின் பின்னால் செல்ல வேண்டாம். விவசாயிகள், தொழிலாளர்கள் சாதி-மதம் பார்த்து ஏதும் செய்யவில்லை.
அறிவியல் ரீதியாக சிந்திக்க மாணவர்களை தூண்டிய விஜய் :
மழை, வெயிலில் என்ன சாதி இருக்கிறது?. போதைப்பொருளை போல சாதி-மதத்தை தூரமாக ஒதுக்கி வையுங்கள். அதுதான் அனைவர்க்கும் நல்லது. பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சிக்கின்றனர். ஒன்றிய UPSC தேர்வில் கூட சாதிசாயம் பூசுகிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த உலகத்தில் சரி, தவறு என அடையாளம் காணுங்கள். அறிவியல் ரீதியாக சிந்தனை செய்யுங்கள். AI தொழில்நுட்பத்தை எதிர்கொள்ள பழகுங்கள். இப்போது பலவிதமான டெக்னாலஜி வந்துவிட்டது. அதற்கேற்ப நாமும் அப்டேட் ஆக வேண்டும்" என்று கூறி தனது பேச்சை முடித்தவர் மாணவர்களுக்கு பரிசை வழங்கினார்.