ஜூன் 10, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. Trending Video: திருமணம் முடிந்த காதலியை காண வந்த முன்னாள் காதலன்.. கட்டிவைத்து சம்பவத்தை அரங்கேற்றிய உறவினர்கள்.!
இன்றைய வானிலை (Today Weather):
அதன்படி, தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், தென்காசி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும், காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை :
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 10, 2025