Tamilnadu Rains (Photo Credit: @RNivascar / @THChennai X)

டிசம்பர் 28, நுங்கம்பாக்கம் (Chennai News): தெற்கு கேரள கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (Today Weather) 28-12-2024 மற்றும்‌ 29-12-2024 ஆகிய தேதிகளில் தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகாலை வேளையில்‌ ஒருசில இடங்களில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌ என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

சென்னை வானிலை (Chennai Weather Forecast):

சென்னையை (Chennai Weather Today) பொறுத்தமட்டில் இன்று வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌, லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகாலை வேளையில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்‌. காலை 8 மணிவரையில் சென்னையின் புறநகர் பகுதிகளான மதுராந்தகம், செய்யூர் ஆகிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை நிலவரம் எப்படி? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்:

அதேநேரத்தில், இன்று காலை 20 மணிவரையில் சென்னை, கடலூர், சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை எச்சரிக்கை தொடர்பான அறிவிப்பு: