ஜனவரி 12, நுங்கம்பாக்கம் (Chennai News): சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த 7 நாட்களுக்கு வழங்கியுள்ள வானிலை (Weather) தொடர்பான முன்னறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. Newborn Baby Killed: கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன்; பச்சிளம் பிஞ்சை 23 வயது இளம்பெண்.. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி..!
இன்றைய வானிலை (Today Weather):
12-01-2025 இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளைய வானிலை (Tomorrow Weather):
13-01-2025 நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் யிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 14-01-2025: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. VCK NTK Party: மாநில கட்சிகளாக தரம் உயர்ந்தது: விசிக, நாதக கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..!
மாட்டுப்பொங்கல் அன்று மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்:
15-01-2025 அன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 16-01-2025 மற்றும் 17-01-2025 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை (Chennai Weather) மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast):
இன்று (12-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான 7 மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.