NTK Seeman | VCK Thirumavalavan (Photo Credit: @NaamTamilarOrg X / @thirumaofficial X)

ஜனவரி 11, சென்னை (Chennai News): தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக குரல்கொடுத்து, கடந்த 1999ம் ஆண்டு முதல் அரசியலில் களமிறங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியும், கடந்த 2010ம் ஆண்டு முதல் ஈழத்தில் உயிர்நீத்த தமிழ் சொந்தங்களின் அபயக்குரலுக்கு நீதிகேட்டு, தமிழ் தேசிய அரசியலை கையில் எடுத்து களமிறங்கிய நாம் தமிழர் கட்சியும் கடந்த இரண்டரை தசாப்தங்களாக தமிழ் மக்களின் வளர்ச்சி, உரிமை, அடையாளம் என அவரவர் கோட்பாட்டுக்கு ஏற்ப வெவ்வேறு பாதைகளில் பயணித்து வருகிறது. அரசியல்களத்தில் கருத்து முரண் தான் அடித்தளம் என்ற வகையில், தலித் அதிகாரமும் - தமிழ் தேசியமும், 20 ஆண்டுகளாக மக்களை பல வகையில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில், மாநில அளவில் முக்கிய கட்சிகளாக விசிக, நாதக இருந்தாலும், அவைக்கு நேற்று வரை தேர்தல் ஆணையம் மாநில கட்சிகளுக்கான அங்கீகாரம் என்பதை வழங்கவில்லை. மாநில கட்சிகளுக்கு என வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை அவை அடையாமல் இருந்த நிலையில், வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் அவை கடந்த பாராளுமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கும் நல்ல முன்னெடுப்பை வழங்கியது. அதற்கு கிடைத்த அறிவிப்பாக, இரண்டு கட்சி தொண்டர்களுக்கும் உற்சாக செய்தி நேற்று அக்கட்சியின் தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதாவது, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு மாநில கட்சிகளாக அடையாளப்படுத்தி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் போட்டியிடும் கட்சிக்கு, அங்கீகாரம் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதன் வாயிலாக அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், அனைத்துக்கட்சி என தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்புகள் விடுக்கப்படும். இதனால் இனி வரும் நாட்களில் விசிக, நாதக கட்சியின் நிர்வாகிகளும் கவனத்தை கூடுதலாக பெரும் வாய்ப்புகள் உண்டாகியுள்ளன. VC Chandrakumar: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அறிவிப்பு; யார் இந்த விசி சந்திரகுமார்? 

வி.சி.க-வுக்கு அங்கீகாரம்:

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி (Thol Thirumavalavan) "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (Viduthalai Chiruthaigal Katchi VCK) அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது" என தெரிவித்துள்ளார்.

நா.த.க-வுக்கு அங்கீகாரம்:

அதேபோல, நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாம் தமிழர் கட்சியை மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம்! கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22% வாக்கு விழுக்காடு பெற்றதையடுத்து, நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். இவ்வறிவிப்பை கடிதம் வாயிலாக இன்று (10-01-2025) இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டர்கள் மகிழ்ச்சி:

தமிழக அரசியலில் மிகமுக்கிய அரசியல் இயக்கங்களாக கவனிக்கப்படும் விசிக, நாதக ஆகிய கட்சிகளுக்கு வழங்கப்பட்ட மாநில அந்தஸ்து தொடர்பான அறிவிப்பு, அக்கட்சியின் தொண்டர்கள் இடையே உற்சாகத்தை தந்து இருக்கிறது. இதன் வாயிலாக அக்கட்சியின் தலைவர்கள் தங்களின் இலக்கை நோக்கி பயணிக்கும் முயற்சியில், புதிய அத்தியாயத்தை அடைந்து இருக்கின்றனர். இதற்காக அவர்கள் வெளிப்படுத்திய உழைப்பு அளப்பரியது எனினும், அங்கீகாரம் கிடைத்துள்ள காரணத்தால், விரைவில் அதனை பன்மடங்காக அதிகரிக்க தொண்டர்களுடன் உழைப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகாரத்திற்கான தகவலை பதிவு செய்த திருமாவளவன்:

நாம் தமிழருக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் குறித்து நா.த.க தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: