ஜனவரி 26, சைதாப்பேட்டை: சென்னையில் உள்ள சைதாப்பேட்டை (Saidapet, Chennai), ஆலத்தூர் சாலை நெருப்புமேடு பகுதியில் வசித்து வருபவர் உமர்பாஷா (வயது 19). இவர் லேத் பட்டறையில் பணியாற்றி வருகிறார். காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது.
கடந்த 15ம் தேதி உமர்பாஷாவின் நண்பரான சந்தோஷ் இறந்துள்ளார். இதனால் சைதாப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதியில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் கானா பாடல் (Gana Song) இசைக்கப்பட்டுள்ளது. அப்போது, உமர்பாஷா - அப்பகுதியை சேர்ந்த தினேஷ் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் இருவருக்கும் இடையே முன்பகையாக (Antagonism), தினேஷ் மற்றும் அவரின் 8 நண்பர்கள் சேர்ந்து உமரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்துள்ளனர். அதன்படி, நேற்று நள்ளிரவு நேரத்தில் உமர்பாஷா தனியாக நடந்து சென்றுகொண்டு இருந்தபோது, அவரை தினேஷ் மற்றும் அவரின் நண்பர்கள் சுற்றிவளைத்துள்ளனர். Cook With Comali Season 4: மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 4 தொடக்கம் – கொண்டாட்டத்தில் பார்வையாளர்கள்.!
பின்னர், உமர் பாஷாவை தினேஷ் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு (Umar Basha Murder by Gang) அங்கிருந்து அனைவரும் ஓட்டம் பிடித்தனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய தினேஷ், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்த சைதாப்பேட்டை (Saidapet Police) காவல் துறையினர், தினேஷ் மற்றும் அவரின் 7 நண்பர்களை கைது செய்தனர். எஞ்சிய 2 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது. கானா பாடலில் நடத்த மோதல் சம்பவம் கொலையில் முடிந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.