Heat Wave Sun Set (Photo Credit: Twitter)

ஜூலை 30, சென்னை (Weather Update Tamilnadu): சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 40.8 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

மேற்குத்திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக 30 மற்றும் 31ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 01ம் தேதி முதல் 05ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ஸ்ஸ வெப்பநிலையாக 30 மற்றும் 31ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்ஸியஸ் முதல் 40 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பாய் விட 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் அதிகமாக இருக்கும். அதிக வெப்பநிலை & ஈரப்பதம் காரணமாக வெப்ப அழுத்தம் ஏற்பட்டு மக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம். Badam Benefits: பெண்களின் உடல்நலனை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பாதாம்; கிடைக்கும் அசத்தல் நன்மைகள் இதோ.! 

சென்னை & புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒருசில பகுதியில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.

மீனவர்களுக்காக எச்சரிக்கையை பொறுத்தமட்டில் வங்கக்கடல் பகுதியில் 30ம் தேதி முதல் 03ம் தேதி வரையில் தெந்தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதியில் இன்று வடக்கு கர்நாடக கடலோரப்பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிலோமீட்டர் வேகம் வரையிலும் வீசக்கூடும். இதனால் இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.