பிப்ரவரி 12, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள கே.கே நகர் பகுதியில் பெண் மருத்துவர் வசித்து வருகிறார். இவர் மேட்ரிமோனி இணையத்தளத்தில் திருமணத்திற்காக பதிவு செய்து இருக்கிறார். அச்சமயம் பெண்ணுக்கு ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அவர் தான் இலண்டனில் இருப்பதாக கூறி இருக்கிறார். இருவரும் நட்பாக பேசி வந்துள்ளனர். சில நாட்களில் இலண்டனில் வசித்து வருவதாக கூறியவர், பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பேசி இருக்கிறார். இருவரும் காதலித்து வந்த நிலையில், தான் இலண்டனில் இருந்து ஆசையாக பரிசு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனைக்கேட்ட பெண்மணியும் பரிசுக்காக காத்திருந்துள்ளார். Lightning Strike Youth Died: மைதானத்தில் நண்பர்கள் கண்முன்னே நடந்த கொடூரம்; கால்பந்து விளையாடியவர் மின்னல் தாக்கி பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!
ரூ.2.87 கோடியை இழந்த பெண் மருத்துவர்: சில நாட்களில் டெல்லியில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் என்று கூறிய நபர்கள், இலண்டனில் இருந்து பரிசு வந்திருப்பதாக கூறி சுங்கவரி செலுத்தசொல்லியுள்ளனர். அவரும் ரூ.2 கோடியே 87 இலட்சம் பணத்தை அனுப்பி இருக்கிறார். ஆனால், பரிசு பொருட்கள் ஏதும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்மணி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், டெல்லியில் இருந்து நைஜீரிய கும்பல் மோசடி செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, காவல் துறையினர் தனிப்படை அமைத்து, டெல்லியில் உள்ள ஏ.டி.எம்-மில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை எடுத்த நபர்களின் அடையாளத்தை சேகரித்து 2 நைஜீரியர்களை கைது செய்தனர்.