Died Victim Women Kavitha | Acid Attack (Photo Credit: Maalaimalar / Representative PTI)

மே 01, கோவை (Coimbatore News): கோயம்புத்தூர் (Coimbatore) மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம், காவேரி நகரில் வசித்து வந்தவர் சிவகுமார் (வயது 42). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சிவகுமாரின் மனைவி கவிதா (வயது 35). தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

தம்பதிகள் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோவையில் குடும்பத்தோடு புலம்பெயர்ந்து வசித்து வருகின்றனர். கடந்த 2016ம் ஆண்டில் பேருந்தில் சென்ற பயணியிடம் நகை பறித்த குற்றச்சாட்டில் சிக்கிய கவிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறைக்கு சென்று வந்த கவிதா பலருடன் பழக்கத்தை (Affair) ஏற்படுத்தி இருக்கிறார். கணவர் சிவகுமார் கண்டித்தும் பலன் இல்லை. இந்த விஷயம் தொடர்பாக தம்பதிகளுக்கிடையே தகராறு நடந்து வந்துள்ளது. இதற்கிடையில், சம்பவத்தன்று கவிதா தனது குழந்தைகள் மற்றும் கணவரை தவிக்கவிட்டு கள்ளகாதலனோடு ஓட்டம் பிடித்துள்ளார். MS Dhoni Chennai Baasha: சென்னை அணியின் பாட்ஷாவாக எம்.எஸ் தோனி.. மாஸ் பி.ஜி.எம்முடன் களமிறங்கி அசத்தல்; வைரல் வீடியோ.!

இது கவிதாவின் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தவே, விவாகரத்து செய்து பிரிந்துவிடலாம் என்று முடிவெடுத்து அதற்கான செயல்முறைகள் நடந்து வந்துள்ளன. வழக்குக்கு நேரில் ஆஜராக கடந்த மாதம் 23ம் தேதி நீதிமன்றத்திற்கு வந்த கவிதாவிடம், சிவகுமார் மீண்டும் தன்னோடு குடும்பம் நடந்த அழைப்பு விடுத்தது இருக்கிறார்.

கள்ளக்காதலன் மீது காதல் வயப்பட்ட காரணத்தால் கவிதா சிவகுமாரின் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த சிவகுமார் மறைத்து வைத்த ஆசிட்டை எடுத்து மனைவியின் மீது வீசினார். அவருடன் சேர்ந்து வழக்கறிஞர்கள், பொதுமக்கள் சிலருக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

சுமார் 85% தீக்காயத்துடன் பாதிக்கப்பட்டு இருந்த கவிதாவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த ஒரு மாதம் முழுவதும் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த கவிதா, நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிவகுமாரின் மீது கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை ரேஸ்கோரஸ் காவல் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.