அக்டோபர் 23, சென்னை (Chennai News): சென்னையைச் சார்ந்தவர் சில்வர்ஸ்டர் ஆரோக்யராஜ். இவர் ஐசிஐசிஐ வங்கிக்கிளையில் கணக்கு வைத்துள்ள நிலையில், அதன் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வந்துள்ளார்.
கடந்த மார்ச், 2021-ல் ரூ. 8 இலட்சத்து 9 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளை அமேசான் இணையதளம் மூலமாக ஆர்டர் செய்து, அதற்கான பணத்தை தனது கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தி உள்ளார்.
இதற்காக அவருக்கு அமேசான் தரப்பில் இருந்து 41 ஆயிரத்து 921 வெகுமதி புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வெகுமதி புள்ளிகளை வைத்து அவர் 41 ஆயிரத்து 921 பணம் தள்ளுபடி செய்யும் சலுகையையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், அவர் மற்றொரு பொருளை ஆர்டர் செய்தபோது, அந்த வெகுமதி புள்ளிகள் வங்கி நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பணமாக மாற்றப்படவில்லை. Karnataka Honor Killing: தாழ்த்தப்பட்ட சமூக இளைஞரை காதலித்த மகள் ஆணவக்கொலை; தந்தை வெறிச்செயல்.. துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!
மேலும், அவரது கிரெடிட் கார்டு வங்கி நிர்வாகத்தால் பிளாக் செய்யப்பட்டுள்ள நிலையில், வங்கி நிர்வாகத்திடம் இது தொடர்பாக முறையிட்டும் சரி வர பதில் இல்லை.
இதனையடுத்து, ஆரோக்கியராஜ் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் மூலமாக வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தார். இந்த விசாரணையின் போது வங்கியின் தரப்பில் சரிவர பதிலும் தெரிவிக்கப்படவில்லை, விசாரணைக்கும் ஆஜராக இல்லை.
இதனால் மூன்று வருடங்கள் கழித்து தற்போது ஐசிஐசிஐ வங்கிக்கு பயனரின் வங்கிக்கணக்கில் 41,961 ரூபாய் மற்றும் ரூபாய் 35 ஆயிரம் அபராதம் உட்பட ரூ.76,691 இழப்பீடாக செலுத்த வேண்டும் என ஐசிஐசிஐ வங்கிக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.