ஜனவரி 24, தாடிக்கொம்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு (Thadikombu, Dindigul) சாலையில், வாணிவிலாஸ் சிக்னலில் இந்தியன் ஓவர்சீஸ் (Indian Overseas Bank) வங்கியானது செயல்பட்டு வருகிறது. வங்கியில் இன்று காலை ஒரு பெண் உட்பட 4 ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர். பிற ஊழியர்கள் வந்துகொண்டு இருந்தனர்.
அப்போது, வங்கிக்குள் புகுந்த ஊழியர் திடீரென ஊழியர்கள் மீது மயக்க ஸ்ப்ரே, (Bank Under Attack) மிளகாய் பொடி தூவி இருக்கிறார். இதனால் பதறிபோனவர்களில் மயக்க ஸ்பிரேவால் பாதிக்கப்பட்டவர்கள் மயங்கி விழ, வாலிபர் 2 ஊழியர்களை கட்டிபோட்டுள்ளார்.
அங்கிருந்த சிலர் அதிர்ச்சியுடன் கூச்சலிட்டதால், சரியான நேரத்திற்கு வருகைதந்த வங்கி ஊழியர்கள் வாலிபரை சுற்றிவளைத்து பிடித்து (Thief Captured by Public) தர்ம அடியை தாராளமாக வழங்கினர். அவர் ஹிந்தியில் பேசியதால் வடமாநில கொள்ளையராக இருக்கலாம் என எண்ணி கூடுதலாக அடி விழுந்துள்ளது. Vande Bharat Train: மெதுவாக நகர்ந்த வந்தே பாரத் இரயிலில் ஏற முயற்சித்த நபர்.. நொடியில் காத்திருந்த திருப்பம்.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன சம்பவம்.!
பின்னர், தாடிக்கொம்பு மேற்கு காவல் துறையினருக்கு (Thadikombu West Police Station) தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கலீல் ரகுமான் (வயது 25) என்பதும் தெரியவந்தது.
அவர் பல நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தாலும் போதிய வருமானம் இல்லை என்பதால், குறிகிய காலத்தில் பெரிய தொகையை கொள்ளையடித்து செல்வந்தராக முயற்சித்து பல திருட்டு சம்பவங்கள் தொடர்பான படங்களை பார்த்துள்ளார்.
இறுதியாக துணிவு (Thunivu Movie) திரைப்படத்தை அவர் பார்த்த நிலையில், அதனைப்போல கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். விசாரணையில் உறுதியான விபரங்களை வைத்து அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையேயும் விசாரணை நடந்து வருகிறது.