ஜனவரி 11, சென்னை (Chennai News): தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையான தைத்திருநாள், இன்னும் சில நாட்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பொங்கல் (Pongal 2025) விடுமுறையை தமிழ்நாடு அரசு அதிகரித்து உத்தரவிட்டது. இதனால் பலரும் சொந்த ஊர் சென்று பொங்கலை சிறப்பிக்க ஆயத்தமாக வருகின்றனர். ஜனவரி 10ஆம் தேதியான நேற்று முதல், தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை நகரில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தமாக நேற்று ஒரேநாளில் 1.87 இலட்சம் பயணிகள் தங்களின் சொந்த ஊருக்கு 3,400 பேருந்துகளில் சென்றடைந்துள்ளனர். சென்னை: பொங்கலுக்கு சொந்த ஊர் பயணமா? எந்த பேருந்து நிலையத்தில் உங்க ஊர் பஸ்? விபரம் உள்ளே.!
சிறப்பு பேருந்துகள் & இரயில்கள்:
தென்னக இரயில்வே சார்பில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயல்பாக இயக்கப்படும் ரயில்களை காட்டிலும், சிறப்பு ரயில்களும் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, திருவனந்தபுரம், சேலம் செல்ல விமானங்களும் பயணிகளால் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கட்டணம் வழக்கத்தை விட மூன்று முதல் நான்கு மடங்கு உயர்ந்து இன்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Pongal 2025: தித்திக்கும் தைப்பொங்கல், களைகட்டும் மாட்டுப்பொங்கல், பாசத்துடன் காணும் பொங்கல்... வாழ்த்துச் செய்தி இதோ..!
விமான கட்டணம் பன்மடங்கு உயர்வு:
விழாக்காலத்தை முன்னிட்டு இந்த கட்டண உயர்வானது ஏற்பட்டு உள்ள நிலையில், அதிக கட்டணம் கொடுத்தும் பயணிகள் தங்களது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் இருந்து மதுரை செல்ல வழக்கமாக ரூபாய் 3500 முதல் 4000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது குறைந்தபட்ச கட்டணமே ரூபாய் 17745 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூபாய் 2199 என கட்டணம் வசூல் செய்யப்பட்ட நிலையில், இன்று ரூபாய் 14,300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Pongal Kolam 2025: பொங்கலுக்கு இப்படி கோலங்களை போடுங்க.. ஏரியாவே வாய்ப்பிளக்கும்.!
சென்னை - சேலத்திற்கு ரூ.9571 வரை நிர்ணயம்:
சென்னையில் இருந்து கோவைக்கு ரூபாய் 3485 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இன்று ரூபாய் 16,647 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூபாய் 4199 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இன்று ரூபாய் 12,866 வசூலிக்கப்படுகிறது. அதைப்போல, சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்ல சாதாரண நாட்களில் ரூபாய் 3296 வசூலிக்கப்பட்ட நிலையில், இன்று ரூபாய் 17,771 வசூலிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து சேலம் செல்ல ரூ.2,800 மட்டுமே முந்தைய நாட்களில் வசூல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 9,571 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.