Instagram user Road Bath Issue (Photo Credit: YouTube)

ஜூன் 01, ஈரோடு (Erode News): இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் பிரபலமாக இருக்கும் நபர்கள், தங்களை மேலும் பிரபலப்படுத்தவும், சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை பெறவும் பலவிதமான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறானவர்கள் மேற்கொள்ளும் சில முயற்சிகள் உயிரிழப்பை ஏற்படுத்தும் அல்லது வழக்குகளில் சிக்க வைக்கும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாநகரில் இளைஞர் ஒருவர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி குளித்துக்கொண்டு வீடியோ எடுத்தார். அவர் தனது நண்பர்களிடம் ரூ.10 பெறுவதற்காக இவ்வாறான செயலை செய்ததாக தெரிவித்தார். Thanjavur Crime: விபத்தில் உயிருக்கு போராடிய காதலியை அம்போவென விட்டுச்சென்ற காதலன்; போராடி பிரிந்த உயிர்.. இது காதல் தந்த பரிசு.!

அவர் பல இடங்களில் ஒரே நாளில் குளிக்கும் வீடியோ வெளியானதை தொடர்ந்து, காவல் துறையினர் வாகன விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட இளைஞர் பார்த்தீபனுக்கு (வயது 21) அதிகாரிகள் ரூ.3,500 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

Video Thanks: The News Minute