Avadi Double Murder Accuse Visuas (Photo Credit: @parthireporter X)

ஜனவரி 20, பட்டாபிராம் (Chennai News): சென்னையில் உள்ள ஆவடி (Avadi), பட்டாபிராம், ஆயில்சேரி கிராமம், பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் கஜேந்திரன். இவருக்கு இரட்டைமலை சீனிவாசன் (வயது 27), ஸ்டாலின் (வயது 24) என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரின் மீது பட்டாபிராம், பூந்தமல்லி, ஆவடி உட்பட பல காவல் நிலையங்களில் திருட்டு, கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. Social Activist Killed: கனிமவளக்கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர் & அதிமுக நிர்வாகி லாரி ஏற்றிக்கொலை; பேரதிர்ச்சி சம்பவத்தால் அதிர்ச்சியில் தமிழ்நாடு.! 

2 பேர் சரமாரியாக வெட்டிக்கொலை:

இதனிடையே, கடந்த சனிக்கிழமை மாலை நேரத்தில் இரட்டைமலை சீனிவாசன் வீட்டில் இருந்தபோது, அங்கிருந்த மர்ம நபர்கள் அவரிடம் தகராறு செய்தனர். அப்போது, சரமாரியாக சீனிவாசனை சுற்றிவளைத்த கும்பல், வெட்டிக்கொலை செய்தது. கும்பலிடம் இருந்து சீனிவாசன் தப்பி ஆவடியில் உள்ள தனலட்சுமி நகர் பகுதிக்கு சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்று கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டது. அண்ணன் வெட்டப்படுவதை கண்டு அதிர்ந்தபடி வந்த அவரின் சகோதரர் ஸ்டாலினும், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

5 பேர் கைது., 3 பேருக்கு வலைவீச்சு:

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த ஆவடி, பட்டாபிராம் காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், ஆவடி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். கொலை வழக்கு தொடர்பாக பட்டாபிராம் அம்பேத்கர் தெருவில் வசித்து வரும் பிரவீன் (வயது 19), பாலாஜி (வயது 25), கார்த்திக் (வயது 20), நவீன் குமார் (வயது 20), சத்யா (வயது 20) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவலர் பணியிடைநீக்கம்:

கொலை வழக்கில் தொடர்புடைய கணேஷ், மாதேஷ், தருண் ஆகிய 3 பேர் தேடப்பட்டு வருகிறார்கள். கணேஷ் தரப்புக்கும் - கொலை செய்யப்பட்ட சகோதரர்கள் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கொலை நடந்தது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய பட்டாபிராம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.