Social Activist Jawahar Ali (Photo Credit: @googo654 | @Mupsnellai X)

ஜனவரி 20, திருமயம் (Pudukkottai News): புதுக்கோட்டை (Pudukkottai) மாவட்டத்தில் உள்ள திருமயம் (Thirumayam), வெங்களூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஜெகபர் அலி (வயது 56). இவர் அதிமுக (AIADMK) சிறுபான்மையினர் பிரிவு ஒன்றிய செயலாளர் ஆவார். கடந்த ஜன.17 அன்று, பள்ளிவாசலில் தொழுதுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தார். அச்சமயம், வெங்களூர் - காட்டுபாவா பள்ளிவாசல் சாலையில் சென்றபோது, லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜெகபர் அலி உயிரிழந்த நிலையில், திருமயம் காவல்துறையினர் தகவல் அறிந்து வந்து, அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கல்குவாரியை எதிர்த்ததால் கொலை:

மேலும், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து வந்த நிலையில், ஜெகபர் அலியின் மனைவி மரியம் கணவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக புகார் அளித்தார். இந்த புகாரில், சமூக ஆர்வலனாரான (Social Activist) எனது கணவர், திருமயம் பகுதியில் சட்டவிரோதமாக மலைகள் உடைக்கப்பட்டு, இயற்கை வளங்கள் சூறையாடப்படுகிறது. இதுதொடர்பாக பல விஷயங்களை கணவர் புகாராக அளித்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும். உயர்நீதிமன்றம் வரை சென்று அவர் வழக்கை நடத்துகிறார். கல்குவாரி நடத்தி வரும் ராசு, ராமையா, நண்பர் முருகானந்தம் ஆகியோரின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறினார். Rahul Tiky Wife: யூடியூபர் ராகுல் டிக்கி மரணம்; மனைவி கர்ப்பம்? பரபரப்பு தகவல்.. மாமியாரின் அதிர்ச்சி செயல்.! 

திட்டமிட்டு அரங்கேறிய செயல்:

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கனிமவளக்கொள்ளைக்கு எதிராக புகார் அளித்து வந்த ஜெகபர் அலி, லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, குவாரி உரிமையாளர் ராசு, ராமையா, நண்பர் முருகானந்தம், ஓட்டுநர் என 4 பேர் கைது செய்யப்பட்டனர். கனிமவளக்கொள்ளை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் அலி கொலை செய்யப்பட்டதும் அம்பலமானது.

மாநில அமைச்சரின் தொகுதி:

சமூக ஆர்வலர் கொல்லப்பட்டுள்ள தொகுதி, தமிழ்நாடு மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட விசயத்திற்கு, மாநில அரசுக்கு எதிராக அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

நீதிமன்ற காவலுக்கு உத்தரவு:

இந்நிலையில், கைது செய்யப்பட்ட முருகனானந்தம், ராசு, அவரின் மகன் சதிஷ் உட்பட 4 பேருக்கு, வரும் பிப்ரவரி 03ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று திருமயம் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் ஆஜர்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து, நீதிமன்ற காவலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். Rahul Tiky Dies: தலைக்கவசம் அணியாததால் விபரீதம்; மாமியார் வீட்டிற்கு சென்ற யூடியூபரின் உயிரை பறித்த எமன்..!

கனிமவளக்கொள்ளை தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த 7 நாட்களுக்குள் கொல்லப்பட்ட ஜெபகர்: இறுதியாக அவர் அளித்த பேட்டி இதுதான் என வைரலாகும் காணொளி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியின் கண்டனம்:

இந்த விஷயம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைப்பதிவில், "புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான ஜெபகர் அலி சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள திமுக அரசு என எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்:

அண்ணாமலை கண்டனம்:

பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில், "புதுக்கோட்டை மாவட்டத்தில், மோடி கபடி லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற, முக்கிய பங்காற்றியவர் திரு. ஜெகபர் அலி அவர்கள். இயற்கை வளப்பாதுகாப்பு, கனிமவளங்களின் கொள்ளையைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அக்கறையுடன் செயல்பட்டவர். இவர் கனிம வளக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயன்றவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், ஆட்சிக்கு வந்த பத்தாவது நிமிடத்தில் மணல் கொள்ளைக்குச் செல்லலாம் என்று கூறியே ஆட்சிக்கு வந்த திமுக கொடுத்த தைரியம் இன்றி வேறென்ன? மிக மோசமான விளைவை திமுக அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்" என தெரிவித்துள்ளார். Sniffer Dog Astro Dies: மதுரை மத்திய சிறை மோப்ப நாய் ஆஸ்ட்ரோ மரணம்; 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்.! 

மதுவிலக்குத்துறை அமைச்சார் செந்தில் பாலாஜி பேசியதை சுட்டிக்காட்டி எச்சரித்த அண்ணாமலை: