மார்ச் 03, சென்னை: ஈரோடு கிழக்கு (Erode East Bye Poll) சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் (DMK Alliance) இருக்கும் காங்கிரஸ் கட்சியின் (Congress) சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (E.V.K.S Elangovan), தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவை (AIADMK Candidate K.S Thennarasu) (43,923) விட 66,233 வாக்குகள் அதிகாரம் சேகரித்து, 1,10,156 வாக்குகள் பெற்று அபார வெற்றி அடைந்தார். அவர் தனது வெற்றிக்கு உழைத்த காங்கிரஸ், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது வெற்றியை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை (M.K Stalin, Tamilnadu Chief Minister) நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றார். Elnaaz Norouzi Hot Pics: இஞ்சி இடுப்பு எல்நாசின் இம்சை தரும் கவர்ச்சி கிளிக்ஸ்.. டூ பீசில் கட்டிலில் படுத்து கலங்கடிக்கும் நடிகை..!
செய்தித்தொடர்புத்துறை அறிவிப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களை திரு.@EVKSElangovan அவர்கள் சந்தித்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். #CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu pic.twitter.com/T1jlppllpq
— TN DIPR (@TNDIPRNEWS) March 3, 2023
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இடுகை
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு மு.க ஸ்டாலின் அவர்களை (3.3.2023) முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு E.V.K.S. இளங்கோவன் அவர்கள் சந்தித்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி வாழ்த்துப் பெற்றார். pic.twitter.com/aDqcV7XiUo
— EVKS Elangovan (@EVKSElangovan) March 3, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)