Chennai 6 Year Old Boy Dies (Photo Credit: YouTube)

ஏப்ரல் 26, கோயம்பேடு (Chennai News): சென்னையில் உள்ள கோயம்பேடு, 100 அடி சாலையில் விக்டோரியா அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. சம்பவத்தன்று குடியிருப்புக்கு பெற்றோருடன் 6 வயது சிறுவன் துருவ் உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டின் பால்கனி பகுதியில் அவர் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். ஒருகட்டத்தில் சிறுவன் ஆர்வ மிகுதியில் பால்கனியில் உள்ள கட்டிடத்தின் எல்லைக்கம்பி வழியே நுழைந்து விளையாடியதாக தெரியவருகிறது. 40 அடி உயர கரண்ட் வயரில் காத்திருந்த எமன்.. கூலித் தொழிலாளர்களுக்கு சர்ச்சில் நடந்த பயங்கரம்.!

சிறுவன் மரணம்:

இதனை யாரும் கவனிக்காத நிலையில், 6 வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் உயிருக்கு போராடியபடி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும், அவரின் உயிர் பரிதாபமாக பரிதாபமாக பிரிந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.