Accident (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 13, மீனம்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் ஓ.எம்.ஆர் சாலையில் செயல்பட்டுவரும் பிரபலமான தனியார் கல்லூரி ஒன்றில், எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இன்று காலை 8 மணியளவில், கிண்டியில் இருந்து பல்லாவரம் நோக்கி தனது காரில் பயணம் செய்துள்ளார். இவர் மீனம்பாக்கம் சிக்னல் அருகே வந்தபோது, சிவப்பு நிறம் ஒளிர்ந்துள்ளது. இதனால் வாகனங்கள் நின்றுவிடும் என பாதசாரிகள் சாலையை கடக்க முயற்சித்துள்ளனர். அச்சமயம் பாலமுருகன் தனது காரை திடீரென வேகத்தை அதிகப்படுத்த, சாலையை கடந்த 6 பேரின் மீது வாகனம் மோதி, இருசக்கர வாகன ஓட்டியின் மீது மோதி நின்றது. Rajapalayam Shocker: காவலாளியின் தலையை துண்டித்து, பாலத்தில் வைத்துச்சென்ற கொடூரம்.. நடுநடுங்க வைக்கும் சம்பவம்.! தமிழகமே அதிர்ச்சி..! 

6 பேர் படுகாயம்; ஓட்டுனருக்கு தர்ம அடி:

நொடிப்பொழுதில் நடந்த துயரத்தில் பள்ளி மாணவர்கள், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் என 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் கார் ஓட்டுநரை பிடித்த பொதுமக்கள், தர்ம அடி கொடுத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட அனைவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு மருத்துவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளித்த நிலையில், பள்ளி மாணவி மற்றும் துப்புரவு பணியாளர் ஒருவருக்கு கால்களில் முழுவதும் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், கடந்த 4 நாட்களாக உறக்கம் இல்லாமல் வேலை பார்த்து வந்த பாலமுருகன், கிண்டியில் இருந்து பல்லாவரம் செல்ல வாகனத்தை இயக்கி இருக்கிறார்.

காவல்துறையினர் விசாரணை:

இதனால் சிக்னலில் சிவப்பு நிறம் ஒளிருவதை பார்த்தவர், உறக்கத்தில் வாகனத்தை நிறுத்த பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக, வேகத்தை அதிகரிக்கும் ஆக்லரேட்டரை அழுத்தி இருக்கிறார். இதில் வாகனம் தறிகெட்டு இயங்கி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய நபரிடம் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.