Nanganallur Child Girl Aishwarya Dies on 13 Feb 2025 (Photo Credit: @ThanthiTv X / Pixabay)

பிப்ரவரி 14, நங்கநல்லூர் (Chennai News): சென்னையில் உள்ள நங்கநல்லூர் (Nanganallur), எம்எம்டிசி காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், 7 வயதுடைய சிறுமி ஐஸ்வர்யா வசித்து வருகிறார். சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். சிறுமியின் தந்தை சம்பத், அதே பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த சிறுமியை, தினமும் அவரின் தந்தை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று, பின் மீண்டும் அழைத்து வருவது வழக்கம்.

இரும்பு கேட் சிறுமி மீது விழுந்து சோகம்:

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவியை, தந்தை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது, சிறுமி வீட்டின் வாயில் இரும்பு கதவை திறந்துள்ளார். அவரின் தந்தை இருசக்கர வாகனத்துடன் சென்றபின்னர், இரும்பு கேட் மூடப்பட்டது. அச்சமயம், திடீரென இரும்பு கேட் சிறுமியின் மீது சரிந்து விழுந்தது. நொடிப்பொழுதில் நடந்த இந்த சம்பவத்தில், சிறுமியின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மற்றும் சிறுமியின் தந்தை, உடனடியாக செயல்பட்டு சிறுமியை மீட்டனர். TVK Vijay Y Security: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு; மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.! 

மருத்துவமனையில் மரணம்:

இரத்த வெள்ளத்தில் மயங்கிய சிறுமியை, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தபோது, அங்கு சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் சிறுமியின் குடும்பத்தினர் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர். மேலும், தகவல் அறிந்து வந்த பழவந்தாங்கல் காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணை நடத்திய அதிகாரிகள், சிறுமியின் மரணம் தொடர்பான சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் பதறவைக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது.

அதிகாரிகள் அறிவுறுத்தல்:

வீடியோவில் சிறுமியின் தந்தை இருசக்கர வாகனத்தை வீட்டிற்குள் கொண்டு சென்ற பின்னர், சிறுமி கதவை மூடும்போது, இரும்பு கதவு சிறுமியின் மீது நேரடியாக விழுந்தது பதிவாகியுள்ளது. வீட்டின் பாதுகாப்புக்காக இரும்பு கேட் வைத்துள்ளார், அதன் செயல்பாடுகள் மற்றும் உறுதித்தன்மையை அவ்வப்போது சோதித்தித்துக்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

சிறுமியின் மீது இரும்பு கேட் விழுந்து துடித்த சிறுமி, பதறவைக்கும் காட்சிகள்: