
பிப்ரவரி 14, புதுடெல்லி (New Delhi News): தமிழக மண்ணில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்புடன், திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வந்த நடிகர் விஜய், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார். தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் காலமாக மாற்றி, தொடர்ந்து கட்சியின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளார். மேலும், கட்சியின் மாவட்ட செயலாளர் உட்பட பிற பிரதிநிதிகள் நியமனமானது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. Madurai Accident: மாட்டுத்தாவணி தோரண வளைவை இடிக்கும் பணியில் சோகம்; ஜேசிபி ஆபரேட்டர் பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!
விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அறிவிப்பு (TVK President Vijay Y Security):
அரசியல் பயணத்திற்கு முன்னதாக திரையுலக பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இயக்குனர் எச். வினோத்துடன் இணைந்து ஜனநாயகன் என்ற தனது 69ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதும், தீவிர களப்பணியில் இறங்கலாம் என்றும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நடிகர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இனி விஜய்க்கு பாதுகாப்பு அளிக்க உள்ளது. ஒன்று அல்லது இரண்டு கமாண்டோ அதிகாரிகள், காவலர்கள் என எட்டு பேர் குழு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். Maha Kumbh Mela Viral Girl: சிறப்பு அழைப்பாளராக கேரளா செல்லும் இந்தியாவின் 'மோனாலிசா'.. காரணம் என்ன..?
இந்தியாவில் வழங்கப்படும் உயரிய பாதுகாப்பு வகைகளில் இறுதியில் இருந்து இரண்டாவதாக இருக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு, முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் நிலையில், தற்போது விஜய்க்கு கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.