
மார்ச் 01, பெருங்களத்தூர் (Chennai News): சென்னை பெருங்களத்தூர், வேல் நகர் பகுதியில் வசித்து வந்தவர் அலெக்ஸ்சாண்டர். இவர் இயற்கை எய்திவிட்டார். அலெக்சின் மனைவி கலாவதி. தம்பதிகளுக்கு ஜோஷ்வா என்ற மகன் இருக்கிறார். சிறுவனுக்கு தற்போது 15 வயது ஆகிறது. ஜோஷ்வா பீர்க்கன்காரணை அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். கடந்த பிப்.27 அன்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற பீர்க்கன்காரணை, மீண்டும் வீட்டிற்கு மாலையில் திரும்பினார். வீட்டிற்கு வரும்போதே சோர்வுடன் காணப்பட்ட சிறுவன் ஜோஷ்வா, ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மகன் தூக்கில் சடலமாக தொங்குவதைக்கண்டு அதிர்ந்துபோன தாய் காலாவதி, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த அதிகாரிகள், ஜோஷ்வாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். "3 வயது சிறுமி மீதும் தவறு உள்ளது" - பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி விவகாரத்தில் ஆட்சியர் பேச்சு.!
காவல்துறை விசாரணை:
விசாரணையில், சிறுவன் தனது மரணத்திற்கு காரணம் பள்ளியின் தலைமை ஆசிரியை, உதவி தலைமை ஆசிரியை, பள்ளி நிர்வாக அதிகாரி தான். அவர்கள் தான் செய்யாத தவறை செய்தேன் என ஒப்புக்கொள்ள மிரட்டுகிறார்கள். நான் குற்றவாளி என ஒப்புக்கொள்ளாத பட்சத்தில், எனது மாற்றுச்சான்றிதழை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்திடுவேன் என மிரட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியை பொன்னுத்தாயி, உதவி தலைமை ஆசிரியை உஷா, அலுவலக உதவியாளர் என 3 பேருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார். இவர்கள் எதற்காக மாணவரை கண்டித்தனர்? பள்ளியில் நடந்தது என்ன? என அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர். முதற்கட்டமாக பள்ளியில் சிறுவன் ஜோஷ்வா மற்றும் அவருடன் பயின்று வரும் மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு குறித்து ஆசிரியர்கள் தகவல் அறிந்து கனடித்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. விசாரணை தொடருகிறது. இதனிடையே, கணவரை இழந்து மகனே கதி என வாழ்ந்து வந்த தாய், தனது மகனையும் இழந்து நிர்கதியாய் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.